நடிகரின் மகளை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர்: கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்!
நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது காதலியை கரம்பிடித்திருக்கிறார் இந்திய அணி கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
திருமணம்
இந்திய அணியின் ஆரம்ப ஆட்டநாயகனாகவும், துணைக்கெப்டனுமான கே.எல்.ராகுலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக தான் காதலித்து வந்த ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இவர்கள் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இவர்களின் திருமணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டாலா பகுதியில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் இவர்களின் திருமணம் உற்றார் உறவினர்கள் என சொந்தங்களுடன் இடம்பெற்றுள்ளது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.