தங்கத்தை இந்த ராசிக்காரங்க மறந்தும் அணியக்கூடாதாம்! பிரச்சினை தேடி வரும்
நாம் அணியும் உலோகங்களின் பண்புகள் மற்றும் பலன்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் தங்கம் அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுகின்றது. ஜாதகரின் கிரக தோஷங்களை நீக்க தங்கம், வெள்ளி அல்லது பிற உலோகங்களில் பல ரத்தினங்களை அணியுமாறு ஜோதிடர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
இங்கு தங்கம் அணிவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும், யாரெல்லாம் அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தில் தங்கம்
ஜோதிடத்தில் குருவிற்கும், தங்கததிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. தங்கத்தின் மீதான குருவின் தாக்கம் என்பது அதிகம். வாழ்க்கையில் செல்வம், பெருமை மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை பெருகும்.
மேஷம்:
இந்த ராசிக்காரர்களுக்கு தங்க மோதிரம் அணிவது நன்மை தரும். தங்கம் அணிந்திருப்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகின்றன. முக்கியமாக கடனில் இருந்து விடுபடலாம்.
சிம்மம்:
இந்த ராசிக்காரர்களுக்கு தங்கம் பலன் தரும். உண்மையில் இந்த ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நட்புறவு இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிய வேண்டும்.
கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவதால் நன்மை உண்டு. இந்த ராசிக்காரர்கள் தங்கச் சங்கிலி அணிவதால் அமோக வெற்றி பெறுவார்கள். மேலும், நிதி நிலையும் நன்றாக மேம்படும்.
தனுசு:
இந்த ராசியின் அதிபதி குரு. தங்கம் - குருவுக்கு இடையே சிறப்பான உறவைக் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிவது நல்லது. இதன்மூலம் எந்தவொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள்.
எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கம் அணியக்கூடாது?
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கம் அணியக்கூடாது. மறுபுறம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்களை அதிக அளவில் அணியக்கூடாது.