செயலிழக்கும் சிறுநீரகம்... உடனே இந்த ஆபத்தான பழக்கத்தை விட்டுருங்க
நமது உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கொள்ள வேண்டுமென்றால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனெனில் நமது உடம்பில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கிய வேலையாகும்.
சிறுநீரகம் சரியாகச் செயல்படவில்லை என்றால் பல நோய்கள் தாக்குவதுடன், சிறுநீரகம் பழுதடைந்தால் உயிர் வாழ முடியாத நிலையும் ஏற்படுகின்றது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளித்தாலும் அது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால் சிறுநீரகத்தில் எந்தவொரு பிரச்சினை வராமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகத்தை பாதிக்கும் தவறுகள்
சிறுநீரை அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது. இது பாரிய சிக்கலில் கொண்டு விடுகின்றது. அதிலும் பெண்கள் வெளியிடங்களுக்கு சென்றால் இவ்வாறு சிறுநீரை அடக்கி வைக்கின்றனர். இது தவறான செயலாகும்.
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டும். ஆதலால் உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் சரியான அளவிற்கு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நொறுக்குத் தீனி எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.. ஏனெனில் இவை சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதற்கு பதிலாக பச்சை காய்கறிகள், பழங்கள் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும்... பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளை அளவோடு எடுத்துக் கொள்ளவும்... அதிக இனிப்பு உள்ள சோடா வகைகள், குளிர்பானங்கள் சிறுநீரகத்தை செயலிழக்க வைத்துவிடும் ஜாக்கிரதை.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரகத்தில் இருக்கும் ரத்த நாளங்களை சேதப்படுத்தி ரத்தத்தினை சரியாக சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுகின்றது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |