சாப்பிட்ட உடனே இந்த தவறை இனிமேல் செய்யாதீங்க
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு என்பது முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உணவை உட்கொண்ட பின்பு நாம் செய்யக்கூடாத கெட்டப்பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் சாப்பிட்ட பின்பு நீங்கள் செய்யும் கெட்ட செயல்கள் உங்களது எடையை அதிகரிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உணவருந்திய பின்பு செய்யக்கூடாத செயல்கள்
உணவு உண்டவுடன் ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி அருந்த விரும்புவவது இயற்கை. ஆனால் இது தவறான செயலாகும். ஆம் சாப்பிட்ட 1 மணி நேரத்திற்கு பின்பே தேநீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுகின்றது.
இதே போன்று தண்ணீரும் சாப்பிட்ட உடனே குடிக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வயிற்றின் அமிலத்தன்மை நீர்த்து போகச் செய்வதுடன், செரிமான பிரச்சினையும் ஏற்படும்.
சாப்பிட உடன் கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது. ஏனெனில் உங்கள் உடல் செரிமான உறுப்புகளுக்குப் பதிலாக உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது வயிற்று அசௌகரியம், பிடிப்புகள் மற்றும் சோம்பலை ஏற்படுத்துகிறது.
சாப்பிட்ட உடன் படுப்பது கூடாது. இவ்வாறு செய்வது நெஞ்செரிச்சல் மற்றும் அமில தன்மையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட மூன்று மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்லவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |