தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி... உயிரை பறிக்கும் நோயிலிருந்து தப்பிக்கலாம்
இன்றைய அவசர உலகில் பெரும்பாலான மக்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிலும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள், பல மணி நேரம் கணினி முன் உட்கார்ந்து இருக்கும் நிலையில், இவர்கள் நடைபயிற்சியையும் பெரிதாக மேற்கொள்வது இல்லை. உடல்நல பிரச்சினை மட்டுமின்றி கண் பிரச்சினையும் ஏற்படுகின்றது.
தற்போது ஆய்வு ஒன்றில், தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும், ஆரோக்கியமாக இருக்கலாமாம்.
ஆம நாள் முழுவதும் சிறிது நேரம் நடப்பது தசைகளை செயல்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அதிக நேரம் அமர்ந்திருப்பது ரத்த நாளங்களில் அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆதலால் வெறும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் ரத்த அழுத்த அளவை குறைப்பதுடன், மேற்கொண்ட நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
20 நடைபயிற்சியின் நன்மைகள்
நடைபயிற்சி மேற்கொள்வது கார்டியோ உடற்பயிற்சி ஆகும். இவை கலோரிகளை எரிக்க உதவுவதுடன், உடல் எடையையும் நீங்கள் விரும்பும் நிலைக்கு குறைக்கலாம்.
இதய நோய்களில் அபாயத்தை நடைபயிற்சி குறைக்கின்றது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் நடைபயிற்சி அவசியமாகும்.
மன ஆரோக்கியம் மேம்படுவதுடன், மன அழுத்தத்தினையும், பதட்டத்தையும் குறைப்பதுடன், தன்னம்பிக்கை மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் செய்கின்றது.
நடைபயிற்சி மேற்கொள்வதால் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துவதுடன், சமநிலை மற்று ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவி செய்கின்றது நடைபயிற்சி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |