அறியாமையினால் ஒரே கையெழுத்தில் என்னுடைய சொத்தை இழந்து நடு தெருவில் நிற்கிறேன்! கண்ணீருடன் வெளியிட்ட பதிவு..
ஒரே கையெழுத்தில் பலகோடி ரூபாய் சொத்தை இழந்து விட்டதாக நடிகை சுதா கண்ணீருடன் வெளியிட்ட தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரை தான் நடிகை சுதா.
இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவரின் யதார்த்தமான நடிப்பால் அம்மா கேரக்டரில் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரின் நடிப்பு சின்ன சீன் என்றாலும் அதிலும் ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியில் நடிகை சுதாவின் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இவரின் பேச்சைக் கேட்கும் பொழுது இவரை பார்க்கும் போது இவ்வளவு பிரச்சினை இருப்பது தெரியாதது போல் நடந்துக் கொள்பார்கள்.
கண்ணீருடன் குடும்ப பிரச்சினை கூறிய பிரபலம்
இந்நிலையில் இவர் பேட்டியில் கூறியதாவது, “நான் சிறு வயதில் பணக்கார வீட்டு பிள்ளையாக வசதியாக வளர்ந்தேன். ஆனால் விதி எங்களை பழிவாங்கிவிட்டது. எங்களது தந்தைக்கு புற்று நோய் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியானதிலிருந்து பாதிச் சொத்துக்கள் விற்கப்பட்டது.
இதனால் நாங்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு கூட இல்லாமல் இருந்தோம். பின்னர் எனது அம்மா அவரின் தாலியை விற்று நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்களுக்கு உணவளித்தார். இதனை தொடர்ந்து நான் சினிமாவிற்குள் நுழைந்த பிறகு எனக்குப் பணமும் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
சிறிதுக் காலம் சென்றதும் நான் பல கடுமையான இழப்புகளை சந்தித்தேன். இதன்படி, டெல்லியில் ஒரு ஹோட்டல் திறந்தேன் அதில் எனது பணம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன். ஒரே கையெழுத்தில் எனது சொத்துக்கள் அனைத்தும் பறிப்போய் விட்டது. தொடர்ந்தும் நான் கடனாளியாக மாறிவிட்டேன்.
மேலும் எனக்கு ஒரு மகன் இருக்கிறார் அவர் அவருடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டு குடியேறி விட்டான். சில வாய்த்தரக்கங்களினால் வெளியில் சென்றவன் என்னிடம் பேசவே இல்லை. என்னுடை கணவரும் என்னை விட்டு சென்றுவிட்டார். இப்போது தனியாக இருக்கிறேன் ”என கண்ணீருடன் கூறியிருந்தார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இவருடைய கண்ணீரை பார்த்த ரசிகர்கள் “தனது சொந்த அம்மாவை தனியாக தவிக்க வைத்திருக்கும் மகனுக்காக அழ வேண்டாம்” என மனதைரியம் கொடுக்கும் கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள்.