என்னது...இந்தப் பொருட்களின் பாவனையாலும் புற்றுநோய் ஏற்படுமா?
புற்றுநோய் என்பது மிகவும் கொடிய வியாதி என்று நாம் அனைவரும் அறிவோம்.
புற்றுநோய் இருக்கும் சமயத்தில் அதிகப்படியாக முடி கொட்டுதல், உடல் சோர்வு என கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொன்றுவிடும்.
இந்நிலையில் நாம் பயன்படுத்தும் சமையலறைப் பொருட்கள் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படும் எனக் கூறினால் நம்ப முடிகின்றதா?
சரி இனி சமையலறையில் பயன்படுத்தும் என்னென்ன பொருட்களினால் புற்றுநோய் அபாயம் காணப்படுகிறது எனப் பார்ப்போம்.
image - Zee news
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் அதிகப்படியான டிரான்ஸ் கொழுப்புகள் காணப்படுவதால், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது.
image - Eealanadu
ப்ளாஸ்டிக் போத்தல்
பிஸ்பெனால் ஏ என்ற நச்சுப்பொருள் ப்ளாஸ்டிக் போத்தல்களில் இருப்பதால் இது ஹோர்மோன்களின் சமநிலைத் தன்மையைக் குலைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.
image - one india tamil
பதப்படுத்திய இறைச்சி
இது ஆண்களுக்கு பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும்.
நான் ஸ்டிக்
இது விதைப்பை, கருப்பை, சிறுநீரகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. காரணம், இவ்வகை பாத்திரங்களை சூடேற்றும்போது அது பிஎப்ஓஏ என்ற அமிலத்தை வெளிப்படுத்துகின்றது.
image - Her Zindagi