மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த தவறை செய்யாதீங்க... பிரச்சினை ஏற்படுமாம்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை சுவைக்க விரும்பாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இதில் எண்ணற்ற சத்துக்களுடன் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் இருப்பதால், நீண்டநேரத்திற்கு பசி உணர்வு இருக்காது.
எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தங்கள் டயட்டில் எவ்வித தயக்கமுமின்றி சேர்த்துக்கொள்ளலாம். மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.
கோடை காலங்களில் கிடைக்கும் மாம்பழம் பலருக்கும் மிகவும் பிடித்தமான கனிகளில் ஒன்றாக ஒன்றாகும். ஆனால் இந்த கனியுடன் சில பொருட்களை சாப்பிடக்கூடாதாம். அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாம்பழம் சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாத தவறு
மாம்பழம் சாப்பிட்ட பின்பு பாகற்காயை எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டும் எதிரெதிர் சுவை கொண்டதாகும்.
மாம்பழம் சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. 15 நிமிடம் கழித்து குடிக்கவும்.
மாம்பழம் சூடு என்பதால் அதனுடன் குளிர்ச்சியான தயிரை சாப்பிடக்கூடாது.
மாம்பழம் சாப்பிட்ட பின்பு எந்தவொரு கார்பனேற்ற குளிர்பானத்தையும் சாப்பிடக்கூடாது.
காரமான உணவுகளுடன் மாம்பழத்தை சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படும்.
சாலட் தயாரிக்கும், மாம்பழம், தர்பூசணி இவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |