கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சூர்ய கிரகணம் 2022! இதையெல்லாம் செய்திடாதீங்க
சூர்ய கிரஹணம் 2022 செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை: சூரிய கிரகணம் (Solar Eclipse) என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழ உள்ளது. பகுதி சூரிய கிரகணமாக இருந்தாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
இல்லையெனில் அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையானதாக இருக்கலாம். இந்த கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி அதிகாலை 04:08 மணி வரை நீடிக்கும்.
சூாிய கிரகணம் அனைத்து ராசிகளையும் மற்றும் அவற்றின் பலன்களையும் பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த மணிமேகலை! வீட்டில் நடந்த அசம்பாவிதம்
கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை
கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.