கணவருடன் ரொமான்ஸாக நடிகை சினேகா... வைரலாகும் புகைப்படம்
நடிகை சினேகா மற்றும் கணவர் பிரசன்னா தம்பதிகள் இன்று தனது 14வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, 2000ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். பின்பு ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் நடித்து அசத்தினார்.
நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்த போது அவரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர்.

திருமண நாள் கொண்டாட்டம்
தற்போது நடிகை சினேகா குழந்தைகள் வளர்ந்த பின்பு மீண்டும் நடிக்க வந்ததுடன், மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படம் டுத்து தனது பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது தங்களது 14வது திருமணநாள் கொண்டாட்டத்தினை கொண்டாடியுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |