முதல்வர் விஜய்கு திருஷ்டி எடுத்த பெண்! அவர் கொடுத்த கியூட் ரியாக்ஷனை பாருங்க
நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்ததில் இருந்து போராட்டங்களை கடந்து நேற்றைய தினம் (மே 10) தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்றத்தில் இருந்து பல புதிய மாற்றங்களை, புதிய விடயங்களையும் செய்து வருகிறார்.
அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் பதவிஏற்பு நிகழ்ச்சி முடிந்தன் பின்னர் நேராக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு முதல்வர் விஜய்யை ஸ்டாலின் கட்டியணைத்து கையை பிடித்து உள்ளே அழைத்து சென்ற காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து முதல்வர் விஜய் வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் வீட்டுக்கும் சென்று இருந்தார்.

இந்நிலையில், வைகோ வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்றபோது, அவரது வீட்டில் பணியாற்றும் பெண்களை அழைத்து விஜய்யிடம் பேசும் வாய்ப்பை கொடுத்தார்.
இவர்கள் எல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க என அந்த பெண்களை பற்றி கூறினார். அவர்கள் விஜய்யை அருகில் பார்த்த பூரிப்பிலும் வியப்பிலும் இருந்தனர்.

ஒரு பெண் திருஷ்டி கழிக்க, விஜய்யும் அதை திருப்பி செய்தது ரசிகர்களை நெகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் ஒரு பெண் திடீரென விஜய்யின் காலில் விழ, அதை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
Love how the lady Drishti Sutharadus for CM Vijay and he does it right back!! pic.twitter.com/GdFVHS5PvO
— Akshita Nandagopal (@Akshita_N) May 11, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |