உண்மையில் சிறகுகள் கொண்ட பாம்பு உள்ளதா? வைரலாகும் புகைப்படத்தின் அதிர்ச்சி பின்னணி!
இணையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறகுகள் கொண்ட பாம்பின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அவை உண்மையான பாம்பு தான் என கருத்துகள் வெளி வந்தன.
மேலும் அந்த படத்தை பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவை உண்மையான புகைப்படம் இல்லை என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இதனிடையில் இந்த படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்ததில், சாதாரண பாம்பின் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சிறகுகள் இணைத்து உண்மையான பாம்பு போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம், படத்தை தேடிய போது, ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கான ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் அதே படம் பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதை குராமே என்ற பயனர் 2010இல் அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திட்டத்திற்காக இதை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஒரு பாம்பின் புகைப்படம் மற்றும் இறக்கைகளின் படத்ததை தனித்தனியாக சேகரித்தாக கூறியிருந்தார்.
எனவே, டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது. மேலும், இன்றுவரை சிறகுகள் கொண்ட பாம்பு போன்ற உயிரினங்கள் எதுவும் இல்லை.
கடந்த காலங்களில் கூட இத்தகைய உயிரினம் இருந்ததற்கான பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது படங்களோ இல்லை என்பதே நிதர்சனமான உண்மை