Viral Video: மனிதரைப் போன்று எழுந்து நின்ற ராட்சத ராஜநாகம்! மிரள வைக்கும் காட்சி
ராட்சத ராஜநாகம் ஒன்று மண் மேட்டில் அச்சு அசல் மனிதனை போன்று எழுந்து நிற்கும் காட்சி மிரள வைத்துள்ளது.
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பீதி தொற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு மனிதர்களை பயமுறுத்தி வைத்திருக்கும் பாம்பு, நம்மை கடித்தால் மரணத்தினை சந்திக்கும் நிலைகூட ஏற்படும்.
இந்த காரணத்தினாலே பலரும் பாம்பைக் கண்டால் பயந்து தலைதெறிக்க ஓடிவிடுகின்றனர். இங்கு ராட்சத ராஜநாகம் ஒன்று மனிதரை போன்று எழுந்து நிற்கின்றது.
பொதுவாக பாம்புகள் இருக்கும் இடம் தெரியாமல் அதன் இரையை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி கொன்று விழுங்கிவிடும். இங்கு ராஜநாகம் ஒன்று நிமிர்ந்து மனிதரை போன்று மணல் மேடு ஒன்றில் நிற்கும் காட்சியை We are Malaysians என்கிற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.