தொட்டதும் உயிரிழந்த பாம்பு! கடைசி நொடியில் நடந்த பயங்கர ஷாக்
பாம்பு ஒன்று தொட்டதும் உயிரிழந்தது போன்று நடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்பின் மரண நாடகம்
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பீதி தொற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு மனிதர்களை பயமுறுத்தி வைத்திருக்கும் பாம்பு, நம்மை கடித்தால் மரணத்தினை சந்திக்கும் நிலைகூட ஏற்படும்.
இந்த காரணத்தினாலே பலரும் பாம்பைக் கண்டால் பயந்து தலைதெறிக்க ஓடிவிடுகின்றனர். இங்கு ஹக்னோஷ் பாம்பு ஒன்று தன்னை காப்பாற்றிக் கொள்ள மரண நாடகம் போட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
Hognose snake theatrically fakes death to avoid predation
— Science girl (@gunsnrosesgirl3) February 24, 2023
This behaviour is called Thanatosispic.twitter.com/hXYuWKVlbS
இங்கு நபர் ஒருவர் குறித்த பாம்பை சீண்டுகின்றார். உடனே பாம்பு தான் இறந்துவிட்டது போன்று நடிக்கின்றது. இது தன்னை காப்பாற்றிக் கொள்ள இவ்வாறு செய்வதாக தெரியவந்துள்ளது.
ஹக்னோஸ் பாம்பினால் பயன்படுத்தப்பட்ட அத்தகைய ஒரு நுட்பம் இணையத்தில் வைரலாகி, மக்களை வியக்க வைத்தது.