நாகப்பாம்புகளுக்கு உண்மையில் நாகமனிகள் இருக்கிறதா? உண்மை தர்க்கம்
பாம்பு தன் வாழ்நாளில் பெரும் தவம் செய்தால், அதன் தலையில் நாகமணி தோன்றும் என்று நம்பப்படுகிறது. இந்த மணியில் மந்திர சக்தி உண்டு அதை வைத்திருப்பவர்களுக்கு செல்வம், பாதுகாப்பு, மற்றும் ஆற்றல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
பல இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் இம்மணியின் சக்தியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதன் உண்மை கதை தான் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாக மாணிக்கம்
"நாகமணி" என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இதில் "நாக" என்பது பாம்பு, மற்றும் "மணி" என்பது ரத்தினம் அல்லது முத்து என்பதைக் குறிக்கும்.
இந்த மாய ரத்தினம் பற்றிய நம்பிக்கைகள் பாரம்பரிய இந்திய ஆன்மீகத்திலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஆழமாக பதியப்பட்டுள்ளன. நாகமணி என்பது விஷப்பாம்புகள், குறிப்பாக நாகப்பாம்புகளின் தலைப்பகுதியில் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த மணியில் இருளில் ஒளிரும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனை உடையவர்களுக்கு, தீமையிலிருந்து பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் ஆன்மீக சக்தி, மிகுந்த அதிர்ஷ்டம் எனப் பல வல்லமை வழங்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
உண்மையிலேயே நாகமணிகள் இருக்கிறதா?
உயிரியல் ரீதியாக, நாகப்பாம்புகள் அல்லது பிற பாம்புகள், மொல்லஸ்க்குகள் (மட்டைகள்) போல முத்துக்களை உருவாக்கும் எந்த உடற்கூறியலும் கொண்டதல்ல.
பலர் "பாம்பு முத்து" என நம்பும் பொருட்கள், விஞ்ஞான பரிசோதனைகளில்: பித்தப்பைக் கற்கள் அல்லது அசாதாரண கனிமக் கட்டிகள் எனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
அவை உண்மையான ரத்தினக் கற்கள் அல்ல; மேலும் அவற்றில் அற்புத சக்திகள் என்ற யாதொரு இயற்கைக்கு அப்பாற்பட்ட பண்புகளும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |