கடலுக்கு அடியில் நீர்வீழ்ச்சியா? பெருங்கடலில் மறைந்திருக்கும் மிகப்பெரிய அதிசயம்
கடலின் அடியில் நீர்வீழ்ச்சி
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையிலான கடலுக்கடியில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஒன்று விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது, நாம் வழக்கமாக கற்பனை செய்வது போல் பாறைகளில் இருந்து விழும் நீர்வீழ்ச்சி அல்ல.
மாறாக இது, கடலின் ஆழத்தில் வெவ்வேறு நீர்நிலைத் தன்மைகள் கொண்ட நீரோட்டங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதன் விளைவாக உருவாகுகிறது.
எப்படி உருவாகிறது இந்த நீர்வீழ்ச்சி?
டென்மார்க் நீரிணை பகுதி எனப்படும் இந்தப் பகுதிக்கடியில், வெவ்வேறு வெப்பநிலை, உப்புத்தன்மை, மற்றும் அடர்த்தி கொண்ட கடல் நீரோட்டங்கள் ஒருவருடன் ஒன்று சேரும்போது, அவை கீழ் நோக்கி ஒரு பெரிய நீரோட்டமாக பாய்கின்றன.
இதுவே ஒரு மிகப்பெரிய "நீர்வீழ்ச்சி" போன்ற இயற்கை நிகழ்வை உருவாக்குகிறது. இது பாறைகளில் இருந்து விழும் நீரல்ல எனவே இது தோன்றாத நீர்வீழ்ச்சி என்று கூறலாம்.
இந்த ஆழ்கடல் நீர்வீழ்ச்சியைக் கண்டறிய சிறப்பான கடலறிவு கருவிகள் செயற்கைக்கோள் தரவுகள் ஆழ்கடல் ஆய்வு உபகரணங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடலின் அடியில் நேரடியாக காண முடியாத இந்த நிகழ்வை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் நம்மால் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
இந்நீர் வீழ்ச்சி, மனிதக் கண்களால் நேரடியாக காண முடியாதபோதிலும், இது இயற்கையின் மிகச் சிறந்த மற்றும் மறைவான அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, கடலின் ஆழத்தில் இன்னும் எத்தனை மர்மங்கள் உள்ளது என்பதை உணர்த்துவதோடு, மேலும் பல ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |