ஏடிஎம் இயந்திரத்தில் புகுந்து விளையாடிய பாம்பு... நடுநடுங்கி நின்ற மக்கள்
ஏடிஎம் இயந்திர அறையில் பாம்பு ஒன்று புகுந்து விளையாடி வெளியே வரமுடியாமல் தவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் ஹீரோவாக உலாவரும் பாம்புகளின் காட்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் இங்கு பாம்பு ஒன்று ஏடிஎம் அறைக்குள் புகுந்துள்ளது.
பணம் எக்க வந்தவர்கள் வெளியே நின்று இதனை காணொளியாக படம்பிடித்துள்ளனர். சுமார் 10 அடி நீளமுள்ள இந்த பாம்பு ஏடிஎம் அறையிலிருந்து வெளியே வருவதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகின்றது.
ஆனால் அது முடியாத பட்சத்தில் வேறு வழியில்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் கஷ்டப்பட்டு ஏறி அதில் இருக்கும் கமெரா சிறிய துவாரத்திற்குள் சென்று எஸ்கேப் ஆகிவிடலாம் என்று தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்கின்றது.
குறித்த காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வரும் நிலையில், இறுதியில் பாம்பு எப்படி எஸ்கேப் ஆகியது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |