பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? இந்த தவறை செய்யாதீங்க
அதிக விஷத்தன்மை கொண்ட உயிரினமான பாம்பு நம்மை கடித்தால் நாம் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மதுரையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் சகா கூறிய சில செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்க்கலாம்.
பாம்பு கடித்தால் செய்யக்கூடாத தவறு
பொதுவாக பாம்புகளில் விஷம் அதிகம் கொண்ட நல்ல பாம்பு, விஷப்பாம்பு என்று வகைகள் காணப்படும் நிலயில், விஷப்பாம்பு கடித்தால் கடித்த இடம் சிவந்தும், வீக்கமாகவும் இருப்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் கயிறு கட்டுவது, வாயினால் உறிஞ்சி எடுப்பது, அந்த இடத்தை கத்தியால் கீரி விடுவது இந்த தவறை செய்யக்கூடாது. இவ்வாறு செய்தால் குறித்த இடத்தில் இருக்கும் உறுப்புகள் செயலிழந்து போகும். அல்லது ரத்தம் அதிகமாக வெளியேறி விடும். ஆனால் விஷம் மட்டும் வெளியேறாது.
செய்ய வேண்டியது என்ன?
முதலில் பாம்பு கடித்த நபரை உடனே அந்த இடத்திலிருந்து மாற்றிவிட வேண்டும். ஏனெனில் மீண்டும் அந்த பாம்பு கடித்துவிடக்கூடாது என்பதற்காக. அதே போன்று கடித்த பாம்பை தேடி நேரத்தினை வீணடிக்க கூடாது.
பாம்பு கடித்த நபரை தைரியப்படுத்துவதற்கு, விஷப்பாம்பு கடிக்கவில்லை என்று அவரது பயத்தை போக்கிவிட வேண்டும். உடனே அவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டும். அதாவது நடக்க வைப்பதோ, கடித்த இடத்தினை அசைக்கவே செய்யலாமல் தூக்கிச் செல்லவும்.
கடித்த உடனே நபருக்கு தண்ணீரை கொடுத்துவிட்டு, அவர் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றிவிட வேண்டும். பாம்பு கடித்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனை சென்றுவிட்டால், எந்த விஷப்பாம்பு கடித்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியுமாம்.
பாம்பு கடித்து அதிகமாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், அதற்கான முதலுதவி, கடித்த உடன் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் உயிழரிழப்பு நிச்சயம் குறையும் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |