கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? இரட்டைப் பாம்பு வந்தால் நீங்க பேரதிர்ஷ்டசாலியாம்
பாம்பு என்கிற சொல் நம் காதில் விழுந்தாலே பயம் தொற்றிக்கொள்கிறது. காரணம் பாம்புகளின் நஞ்சு. ஆனால், உண்மையில் பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை.
அறிவியல் புரிதல் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பாம்புகளைக் கண்டவுடன் மனிதர்கள் கொல்வதும், நஞ்சுடைய பாம்புகளால் மனிதர்கள் கடிபட்டு உயிராபத்தை எதிர்கொள்வதும் முடிவுக்கு வந்தபாடில்லை.
தெய்வமாக பார்க்கப்படும் பாம்புகள்
சிவபெருமான் தனது கழுத்தில் நாகாபரணம் அணிந்துள்ளார். முருகன் தன்னிடம் நாகத்தை வைத்துள்ளார். அம்மன்கள் நாகத்தை தலையில் சூடியிருப்பார்கள். நாகம் வழிபாட்டுக்கு உரியதாக நம் நாட்டில் உள்ளது.
சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமோ என்று பலரும் பயப்படுவார்கள். உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில் நம்முடைய கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும்.
கனவில் வந்தால் என்ன அர்த்தம்?
குட்டி பாம்பை உங்கள் கனவில் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அச்சுறுத்தலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகும்.
கனவில் நீங்கள் பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்தாலோ, உங்களை சுற்றியுள்ள ஆபத்து விலகி விட்டது என அர்த்தமாகும்.
உங்களை சுற்றியுள்ள தீய எண்ணம் கொண்ட இரக்கமற்றவரைக் கூட பாம்பு குறிக்கும். அத்தகைய ஆணையோ பெண்ணையோ நம்ப வேண்டாம் என உங்கள் கனவு கூறுகிறது.
ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
பேரதிர்ஷ்டத்தை கொடுக்கும் இரட்டை பாம்புகள்
இரட்டைப் பாம்புகளை கண்டால் பல நன்மைகள் உண்டாகும்.
பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
பாம்பு கடித்துவிட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்
கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.