பாம்பின் மீது கூலாக சவாரி செய்யும் தவளை: ட்ரெண்டாகும் காணொளி
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் ஒரு மலைப்பாம்பையும் ஒரு தவளையையும் காண முடிகின்றது.
இதில் நாம் காண்பது நம்மை ஆச்சரியபடுத்துகின்றது. இப்படி கூட நடக்குமா என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. நெட்டிசன்களும் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
சில நொடிகளே உள்ள இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில், சுமார் இருபது அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று காட்டுக்குள் சௌகரியமாக கடந்து செல்வதைக் காண முடிகிறது. அப்போது ஒரு தவளை அதன் முதுகில் வந்து அமர்கிறது.
இந்த காட்சியை வீடியோவில் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் பொதுவாக தவளைகள் பாம்புகளின் எளிதான இரையாகக் கருதப்படுகின்றன. ஆனால் இந்த வீடியோவில் உள்ள தவளை பாம்பிடம் (Snake) பயப்படவில்லை. அது பாம்பின் முதுகில் அமர்ந்து சவாரி செய்கிறது. அந்த சவாரியையும் மிகவும் அனுபவித்து செய்கிறது.
பாம்பும் அந்த தவளையை துன்புறுத்தாமல் தன் பாட்டில் நகர்ந்து செல்கிறது. இந்த வீடியோவில் உள்ள இந்த காட்சி பார்க்கத்தக்கது.