ஸ்மார் போன் பயன்படுத்தியிருப்பீங்க! ஸ்மார்ட் டாய்லட் வந்துருச்சி தெரியுமா?
ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழிநுட்பத்தால் புதிய குழந்தைகள் போல் மனிதன் மாறிக்கொண்டே வருகின்றான்.
இவைகளை நவீன வளர்ச்சி என்பதா? இல்லை மக்களை சோம்பேறியாக்கும் வேலையா? என்பது தெரியவில்லை.
எமது ஒவ்வொரு நாளின் தொடக்கம் முதல் அந்த நாள் முடியும் வரையும் மனிதன் பல்வேறு தேவைகளுக்காக பல பல நவீன சாதனங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், இதுக்கு கூடவா டெக்னோலஜி தேவை என அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு Kohler நிறுவனம் புதிய கண்டுப்பிடிப்பை கண்டுப்பிடித்துள்ளது.
ஆம், அது தான் ‘ஸ்மார்ட் டாய்லெட்’, இது உலகின் முதல் ஸ்மார்ட் டாய்லெட் ஆகும்.
இந்தப் புதிய கழிவறையில் நீர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டிருக்கிறது.
மேலும் கழிவறை UV ஒளியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறையின் உள்ளமைக்கப்பட்ட இரவு விளக்கு, சூடான காற்று உலர்த்தி மற்றும் எமர்ஜென்சி பேக்-அப் ஃப்ளஷ் ஆகியவையும் உள்ளன.
மேலும், இது தொடர்பான பல புதிய தகவல்களை தெரிந்துக்கொள்ள கீழுள்ள காணொளியில் தெளிவாக காணலாம்.