அடிக்கடி தூக்க மாத்திரை பயன்படுத்துபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க
இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் மனிதர்கள் இரவில் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். இதனால் தூக்க மாத்திரையை எடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றனர்.
இவ்வாறு மாத்திரையினை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் பலரும் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பல சிக்கலில் கொண்டு செல்கின்றது.
தூக்க மாத்திரை எடுப்பதில் ஏற்படும் சிக்கல்
தொடர்ந்து தூக்க மாத்திரை பயன்படுத்துபவர்கள் மயக்கமும் ஏற்படும். மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், தலை கனமாக இருப்பது போன்று உணர்வு ஏற்படும்.
தூக்க மாத்திரையினை பயன்படுத்துவதால் சுவாச கோளாறு ஏற்படுவதுடன், நுரையீரல் சம்பந்தமாக நோய்களும் ஏற்படுகின்றது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன், தோல் வெடிப்பு, மார்பு வலி, குமட்டல், அரிப்பு போன்ற தொந்தரவு ஏற்படலாம்.
மூளையின் செயல்பாடு மந்தமாவதுடன், நினைவாற்றல், செரிவு பிரச்சினைகளுக்கு காரணமாகவும் இருக்கின்றது. மறதியும் ஏற்படுகின்றது.
இயற்கையான முறைகளில் தூக்கக் கோளாறுகளை சரி செய்யவதே, தூக்க மாத்திரைகளின் பயன்பாட்டைக் குறைக்க சிறந்த வழி. சிலர் தூக்க மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் உண்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.