சருமப் பராமரிப்பில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அதற்காகவே தங்களின் நேரத்தையும் பணத்தையும் அதிகமாக விரயம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
உங்களின் உடல் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டுவதில் சரும பராதரிப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. சருமம் ஆரோக்கியமானவும், பொலிவாகவும் இருந்தால் தான் நாம் பயன்படுத்தும் ஒப்பனைகளும், அணிந்துக்கொள்ளும் ஆபரணங்களும் அழகாக தெரியும்.

பெரும்பாலானவர்கள் சரும பராமரிப்பில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும், சருமத்தை பராமரிக்கும் போது சில பொதுவான தவறுகளை செய்துவிடுகின்றனர். இது நீண்ட காலத்தில் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதற்கு தீர்வு கொடுக்கும் வகையில், சருமப் பராமரிப்பில் செய்யக்கூடாத முக்கிய தவறுகள் பற்றி விரிவான மற்றும் தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும பராமரிப்பில் தவிர்க்க வேண்டியவை

1.கைகளை பயன்படுத்தல்
உங்கள் ஃபவுண்டேஷன் அல்லது கண் கிரீம் வரும் போத்தலில் நேரடியாக கைகளை பயன்படுத்தி எடுப்பது முற்றிலும் தவறானது. உங்கள் கைகள் சுத்தமாக இருந்தாலும், நீங்கள் அறியாமலேயே பாக்டீரியா மற்றும் எண்ணெயை உங்கள் கிரீம்களுக்குள் செல்ல வாய்ப்பு காணப்படுகின்றது. அதனால் சரும பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் ஒரு ஸ்பேட்டூலா, ஸ்கூப் அல்லது புதிய பருத்தி துணியைப் பயன்படுத்துவது நல்லது.

2 தவறான தெரிவு
சருமத்தை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். ஆனால், தவறான கிளென்சரை பயன்படுத்துவது ஆரம்த்திலேயே சருமத்தை உலர்த்தி, எண்ணெய் சுரப்பை அதிகரித்து, பருக்களை ஏற்படுத்தக்கூடும். உங்கள் சரும வகைக்கு ஏற்ற வகையில் சரும பராமரிப்பு பெருட்களை தெரிவு செய்ய வேண்டியது இன்றியமையாதது. தவறான தெரிவு உங்கள் ஒட்டுமொத்த சருமத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

3. முகத்தில் அடிக்கடி கை வைப்பது
முகத்தைத் தேய்ப்பதும் இழுப்பதும் சருமத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஐலைனரைப் பயன்படுத்தும்போது கண்களைச் சுற்றியுள்ள தோலைப் பிடித்துக் கொள்வது முதல் கண் கிரீம் தேய்ப்பது வரை, சருமத்தில் இதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் பாதிப்பு குறித்து கொஞ்சடுமும் சிந்திக்காமல் இந்த தவறை செய்கின்றோம்.
உங்கள் சருமத்தில், குறிப்பாக மென்மையான கண் பகுதியில் தேய்ப்பது, காலப்போக்கில் உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கச் செய்கிறது. எனவே இனிமேலும் இந்த தவறை செய்யாதீர்கள்.

4.செல்போனை சுத்தம் செய்யாமை
உங்கள் செல்போனை நாள் தோறும் சுத்தம் செய்யாமல் இருப்பது சரும தொற்றுக்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும். தினமும் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது திரையைத் துடைக்கவும். வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள் உங்கள் தொலைபேசியின் திரையை சேதப்படுத்தும், எனவே அதற்கு உகந்த திரவத்தை கொண்டு போனையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

5. சன்ஸ்கிரீனை தவிர்ப்பது
சன்ஸ்கிரீனை தவிர்ப்பது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் சருமத்தை கருமையாக்கி, முதுமை தோற்றத்தை ஏற்படுத்தி, சரும புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். எனவே, வெளியில் செல்லும் முன் SPF 50 உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டியது முக்கியம். சன்ஸ்கிரீனை தவிர்ப்பது ஏனைய அனைத்து சரும பராமரிப்பு பொருட்களின் பயனையும் இல்லாமல் செய்துவிடுகின்றது.

6.அடிக்கடி ஸ்க்ரப் செய்வது
ஸ்க்ரப் செய்வது சருமத்தை மென்மையாக்கி, இறந்த செல்களை நீக்க உதவும் என்பதால் சருமம் பொலிவாகவே இருக்க வேண்டும் என சிலர் அடிக்கடி ஸ்க்ரப் பயன்படுத்துகின்றார்கள். இது சரும செல்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. 2வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஸ்க்ரப் செய்ய வேண்டும். காரணம் புதிதாக உருவாகும் செல்கள் இறப்பதற்கு 15 நாட்கள் ஆகும்.

7.மேக்அப் பிரஷ்களை சுத்தம் செய்யாமல் இருப்பது
மேக்அப் பிரஷ்களில் எண்ணெய் மற்றும் ஒப்பனை படிகிறது. அதனை நீண்ட நாட்களுக்கு சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தூரிகைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும் அதற்கு குழந்தை ஷாம்பு அல்லது மென்மையான சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தலாம்.

8. சரும பராமரிப்பு பொருட்களை பாவிக்கும் முறை
சரியான வரிசையில் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியம் இல்லாவிடில், அதனை பயன்படுத்துவதே அர்த்தமற்றதாக ஆகிவிடும். உதாரணமாக, சீரம்கள் சருமத்தில் ஊடுருவிச் செல்லும் நோக்கம் கொண்டவை, அதே நேரத்தில் SPF மேற்பரப்பில் இருக்கும், எனவே நீங்கள் முதலில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்திவிட்டு சீரம் போட்டால் அது பொருத்தமற்றது.

9. மேக்கப்பை அகற்றாமல் தூக்குவது
இரவு முழுவதும் மேக்கப்பை அப்படியே வைத்திருப்பது உங்கள் சருமத்தை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது. சருமத்திற்கு ஆரோக்கியமான கனிம மேக்கப்பாகவே இருந்தாலும், பகலில் உள்ள எண்ணெய், அழுக்கு ஆகியவை நிச்சயம் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

10. பருவை உடைப்பது
முகப்பருவை கைகளால் உடைக்க முயற்சிப்பது தொற்று ஏற்பட வழிவகுக்கும். இது பருக்களை அதிகரித்து, பருக்கள் மறையாமல் நீண்ட கால தழும்புகளாக மாற வழிவகுக்கும். பருக்கள் இருந்தால், ஒரு தோல் நிபுணரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சரும பராமரிப்பில் முறையாக பருக்களை கையாளுவது முக்கிய பங்கு வகிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |