கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஆயுர்வேத மூலிகை எண்ணெய் ஒன்னு போதும்!
பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் கூந்தல் மீது தனி பிரியம் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான விடயம் தான்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு, வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் என ஏராளமான காரணிகள் கூந்தல் உதிர்வுக்கு கூந்தல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கின்றது.

ஆனாலும் எப்படியாவது, நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசையில் சந்தைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த எண்ணெய் வகைகள் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களையும் வாங்கி பாவித்து நேரத்தையும் பணத்தையும் வீணாக்கியது மாத்திரமன்றி பக்கவிளையுகளை இலவசமாக பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம்.
இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முற்றிலும் இயற்கை முறையில் பொடுகு பிரச்சினை, முடி உதிர்தல், இளநரை, கூந்தல் வறண்டு போதல் போன்ற கூந்தல் சம்பந்தப்பட்ட சகல விதமான பிரச்சிகைளுக்கும் ஒற்றை தீர்வாக விளங்கும் மூலிகை எண்ணெயை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான ஆமணக்கு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இந்த எண்ணெய்யில் செம்பருத்தி பூ, நெல்லிக்காய், கறிவேப்பிலை, வேம்பு, கரிசலாங்கண்ணி இலைகள் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

மூலிகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எண்ணெயில் இறங்க ஆரம்பித்ததும், எண்ணெய் கருமை நிறமாக மாற ஆரம்பிக்கும். அப்போது பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்றாக ஆறவிட்டு, ஒரு சுத்தமான மெல்லிய துணியால் வடிகட் ஒரு கண்ணாட பாட்டிலிட்டு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, இந்த எண்யெயின் ஊட்டச்சத்தையும் நறுமணத்தையும் அதிகரிக்க லாவண்டர் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்யை சேர்த்தால் அவ்வளவு தான் மூலிகை எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை 2 மாதங்கள் வரையில் கண்ணாடி போத்தலில் வைத்து பாவிக்கலாம்.
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினாலே போதும் கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் நீங்கி கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். கூந்தவின் துனி முதல் அடி வரை நன்றாக தடவி மசாஜ் செய்து குறைந்தபட்டசம் 2 மணிநேரம் அப்படி விட்டுவிட்டு பின்னர் குளிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |