(Vitamin C) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி
பொதுவாகவே வைட்டமின் -சி யை பலரும் எடுத்துக்கொள்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தான்.
வைட்டமின் சி உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமினாக கருதப்படுகின்றது.
வைட்டமின்-சி
உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் வெண்குருதி அணுக்கள் உருவாக்கத்திற்கு வைட்டமின்-சி மிகவும் முக்கியமானது.
சரும பாதுகாப்பு கவசமாகவும் இது செயல்படுகிறது. மேலும், காயங்களை ஆற்றுதல் மற்றும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து விரைந்து குணமடையவும் உதவுகிறது.
பொதுவாகவே சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் -சி நிறைந்து காணப்படுகின்றது.
சிட்ரஸ் பழங்கள் எனப்படுவது சிற்றிக் அமிலம் நிறைந்த பழங்களை குறிக்கும். ஆரஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் -சி சத்து அதிகம் காணப்படும் புளிப்பு சுவையான பழங்களை குறிக்கின்றது.
போலிக் அமிலத்தை செயல்படுத்துதல் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் பித்த அமிலங்களாக கொழுப்பை மாற்றுதல் போன்ற பல வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கும் துணைப்புரிகின்றது.
மேலும் ஒவ்வாமை எதிர்விளைவுகளின் தீவிரத்தை குறைக்கிறது மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வைட்டமின் சியில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் குணமாகும்.
வைட்டமின் சி பற்றாக்குறையால் உடலில் ஏற்படும் காயங்கள் சரியாக நீண்ட நாட்களாகும். மேலும் நோய் தொற்று அதிகரிக்கும். வைட்டமின் -சி உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது.
சருமம் மட்டுமல்லாது பற்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். வைட்டமின் சி குறைபாட்டால் உடலில் கொலாஜன் உருவாவது குறையும். இதனால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும்.
ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்னையும் ஏற்படும். உடலில் வைட்டமின் சி சத்து குறைந்தால் இரும்பு சத்து குறைபாடும் ஏற்படும். இரும்பு சத்து குறைந்தால் இரத்த சோகை உண்டாகும்.
இதற்கு தீர்வாக இரும்பு சத்துள்ள உணவை மட்டும் உட்கொண்டால் போதாது. கூடவே வைட்டமின் -சி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உடல் இரும்புச்சத்தை உறிஞ்சிக்கொள்வதற்கு வைட்டமின்-சி இன்றியமையாதது.
உடல் பருமனாக வைட்டமின் சி குறைபாடும் ஒரு காரணம். வைட்டமின் சி குறைபாடு ஏற்படும்போது உடலில் கொழுப்பு தேக்கம் அதிகரிக்கிறது.
இதனால் உடல் எடை அதிகரிக்கும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை தேவையாான அளவு தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை குறைவடையும்.
மேலும் சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ளவும் இளமையை பாதுகாக்கவும் வைட்டமின் -சி நிறைந்த உணவுகளை தினசரி உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |