60 இலும் 30 போல ஜொலிக்க வேண்டுமா? தர்பூசணி, தயிர் ஃபேஸ் மாஸ்க் இருந்தா போதும்
இப்போது இருக்கும் காலநிலையின் காரணமாக நமது முகம் சருமம் கொலிவிழந்த காணப்படுகின்றது.
இதனால் எரிச்சல் வியர்வைஅரிப்பு டேனிங் மற்றும் பிற சிக்கல்களைக் கொண்டு வருகின்றது. சருமம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க நாம் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
இதன் பின்னர் நமது முகத்தை பராமரிப்பது அவசியம். இதற்கு சில ஃபேஸ் மாஸ்குகளை பயன்படுத்தலாம் அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபேஸ் மாஸ்க்
தக்காளி சாற்றை எடுத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளனஅவை எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிறந்தவை.தக்காளிஆன்டி டேனிங் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டும் சரும்திற்கு சிறந்த நன்மையை கொடுக்கும்.தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்துடன் வைக்கிறது. எண்ணெய் பசை சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வு தருகிறது.
ஒரு கிண்ணத்தில் துருவிய தர்பூசணி மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி இதை உங்கள் முகத்தில் தடவவும்.
வெயிலில் எரிந்த பகுதிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |