வெறும் 10 நிமிடங்களில் மணக்கும் மணல் போன்ற நெய்.... வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்?
ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் நெய்யை குக்கரில் மணக்க மணக்க வெறும் 10 நிமித்தில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நெய்
பழங்காலத்திலிருந்தே இந்திய உணவுகளின் ஒரு பகுதியாக நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதன்மையாக நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள். வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் டி போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், இதில் ப்யூட்ரிக் அமிலமும் உள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நினைவாற்றலும் அதிகரிக்கின்றது. உடல் எடை குறையவும் செய்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நெய்யை வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர்
சேமிக்கப்பட்ட பாலாடை
சமையல் சோடா
Photo: Getty Images
செய்முறை:
நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பாலாடையை ஒரு குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது குக்கரை திறந்தால் நெய் உருவாகி இருப்பதைக் காணலாம். இப்போது குக்கரில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
சில நிமிடங்கள் கிளறிக்கொண்டிருந்தால், குக்கரில் உள்ள நெய் தனியாக பிரிந்து வரும். பின்பு அதனை வடிகட்டி கொண்டு வடிகட்டினால் வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான நெய் தயார்.
மற்றொரு செய்முறையானது நீங்கள் ப்ரிட்ஜின், சில ஐஸ்கட்டிகளையும், ஒரு பாத்திரத்தில் ஐஸ் வாட்டரையும் தயார் செய்து எடுத்துக்கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஆடையுடன் இரண்டு மூன்று ஐஸ் கட்டிகளை சேர்த்து, சிறிது ஐஸ் வாட்டரை சேர்த்துக்கொள்ளவும்.
அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து, நன்றாக அரைத்து எடுத்தால், குறித்த ஆடையில் உள்ள வெண்ணெய் அனைத்தும் தனியாக பிரிந்து மேலே வந்துவிடும்.
image: shutterstock
வெண்ணெய்யை தனியாக எடுத்து இரண்டு முறை ஐஸ் வாட்டரில் போட்டு நன்றாக கழுவினால், சுத்தமான வெண்ணெய் தயார்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து தனியாக வைத்திருக்கும் வெண்ணெய்யை சேர்த்து, 10 நிமிடம் கிளறி விட்டால் நெய்யாக மாறிவிடும்.
பின்பு முருங்கைஇலை உள்ளே சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். குறிப்பாக தீயை மிதமான அளவில் வைத்து தான் நீங்கள் நெய் உருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |