depression : உயிராபத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க
பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த சமூக வைலைத்தளங்களின் பெருக்கம் மற்றும் செல்போன் பாவனை அதிகரித்தமை, அதிகரித்த வேலைபளு மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்கள், ஏமாற்றங்கள் போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது.
தற்காலத்தை பொருத்தவரையில் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவரிகள் வரையில் அனைவருமே பாதிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.
ஒருவர் உடல் ரீதியாக பாதிக்கப்படும் போது அதன் தாக்கம் வெளிப்படையாக விளங்கும் ஆனால் மனரீதியாக பாதிக்கப்படும் போது அவ்வாறு பாதிப்புகள் வெளிப்படையாக தெரிவதில்லை.
மன அமுத்தத்தில் இருப்பவருக்கு இதற்கான அறிகுறிகள் தெரியாத பட்சத்தில் அதிலிருந்து வெளிவருவது மிகவும் சவாலான விடயமான மாறிவிடும்.
மன அமுத்தம் தீவிரமடையும் போது உயிர் ஆபத்தை கூட ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமான ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. எனவே இது குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
மன அழுத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் குறித்தும் அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
எல்லோருக்கும் மன அழுத்தம் என்பது பொதுவான விஷயங்களுள் ஒன்றாக உள்ளதுகடந்தகால அதிர்ச்சிகரமான அனுபவங்கள், துஷ்பிரயோகம் அல்லது திடீர் எதிர்பாராத நிகழ்வுகள் மன அழுத்தத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
உடல்நலப் பிரச்சனைகள், நாள்பட்ட நோய்கள், அல்லது நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரை தொடர்ச்சியாக கவனிக்க வேண்டிய நிலை போன்றன பொரும்பாலும் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணங்களாகும்.
அதிகரித்த வேலைப்பளு மற்றும் தொடர்ச்சியாக சமூக வளைத்தளங்களில் மூழ்கி இருப்பது போன்ற விடயங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் மனதுக்கு நெருக்கமானவர்களின் திடீர் மரணம் மற்றும் காதல் தோல்வி என்பன உச்சகட்ட மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகின்றது.
அதீத வேலை, பண சிக்கல், குடும்பம் தொடங்கி பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. விவாகரத்து, வேலையின்மை கூட காரணம்.
இன்னும் சிலருக்கு வீடு மாறுவது, வேலை மாறுவது போன்ற சாதாரண நிகழ்வுகளும் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.இந்த மன அழுத்தம் காலப்போக்கில் தொடர்ந்து நம்பிக்கையின்மை, கோபம், எரிச்சல், சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பல குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. உலகளவில் 280 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்ப்படுக்கின்றது.
மன அழுத்ததின் முக்கிய அறிகுறிகள்
மன அழுத்தத்தின் அறிகுறிகள் பொதுவாக நபருக்கு நபர் வேறுப்படும். இறுப்பினும் சில பொதுவான அறிகுறிகள் என்றால் தூங்குவதில் பிரச்சனை, அதீத வியர்வை அல்லது பசியின்மை ஆகியவை இருக்கும்.
மேலும், கவலை அல்லது பதற்றம் போன்ற உணர்வுகளும் அதிகம் ஏற்படும். கவனம் செலுத்துவதில் சிரமம், மனநிலை மாற்றம், எரிச்சல், அடிக்கடி ஏற்படும் கோபம், ரிலாக்ஸ் செய்ய முடியாமல் போவது ஆகியவையும் ஏற்படும்.
இதுபோன்ற நேரங்களில் தான் மது, புகைப் பழக்கத்திற்கு அடிமையாவோம். மேலும், பாலியல் உறவுகளிலும் நாட்டம் குறைவதுடன் மன அழுத்தம் தீவிரமடையும் போது தற்கொலை எண்ணங்கள் தூண்டப்படும். இது மிகவும் ஆபத்தான கட்டமாகும்.
உண்மையில் பெரும்பாலானவர்கள் மத்தியில் மன அழுத்தம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இதனால் மன அழுத்தத்தை எல்லாம் பொதுவாக ஒரு பிரச்சினையாகவே கருதமாட்டார்கள்.
ஆனால், இது மோசமான சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, இதைச் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
தீர்வு
முதலில் நீங்கள் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரி செய்ய தேவையான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிக விரக்தியாகவும் சோர்வாகவும் உணர்கின்றீர்கள் என்றால் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.இப்படி உணர்வுகள் தோன்றும் போது அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
மன அழுத்தத்தை உணரும் போது உங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்தோ அல்லது கடையில் வாங்கியோ சாப்பிடுவது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
அதிகரித்த வேலைபளுவால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தை போக்க தினசரி உடற்பயிற்ச்சியில் ஈடுப்படுவது பெரிதும் துணைப்புரியும்.
அல்லது தியானம் செய்யலாம். மன அழுத்தம் குறைய தூக்கம் இன்றியமையாதது.போதிய தூக்கமின்மையானது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
சரியான நேர்ததில் படுக்கைக்கு செல்வது மற்றும் தூங்கும் வரையில் போன் பாவிப்பதை தவிர்ப்பது போன்ற விடயங்கள் மன அழுத்தத்தில் இருந்த விடுப்பட உதவும்.
நடைப்பயிற்ச்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதில் நேரத்தை செலவிடுவது அல்லது எதை செய்யும் போத மனம் மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அதை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது மன அழுத்தத்துக்கு தீர்வு கொடுக்கும்.
முடிந்தவரை தனிமையில் இருப்பதை தவிர்த்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட முயற்சி செய்ய வேண்டும். இறுதியில் எதுவும் உதவவில்லை என்றால் உளவளத்துணையின் ஆலோசைனையை பின்பற்றுவது நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |