பத்தே நிமிடத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கனுமா? இந்த ஒரு பொருள் போதும்
பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும்.
அந்த வகையில் வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேனை வைத்து எவ்வாறு சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேனில் பயன்கள்
தேனில் என்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் காணபப்படுகின்றது இதனால் இது சரும பராமரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.சர்மத்தை என்றும் இளமையாக வைத்திருப்பதற்கு தேன் மிகவும் துணைப்புரிகின்றது.
தயிர், தேன் - ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று மாறிவிடும்.
தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது. இதனால் முகம் எப்பொழுதும் மென்மையாக இருக்கும் தேனை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்திற்கு உடனடி புத்துணர்வு கிடைக்கின்றது.
தினமும் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவுக்கட்டி விடலாம்.
பாக்டீரியா தொற்றினால் முகப்பருக்கள் ஏற்பட்டிருந்தால் அதை போக்க தேன் உதவும். தேன் ஒரு சிறந்த சுத்தப்படுத்தி என்பதோடு சருமத்துக்கு ஈரப்பதத்தையும் அளிக்க கூடியது.
தினசரி சருமத்திற்கு தேனை பயன்படுத்தினால் என்றும் முகத்தை இளமையுடன் வைத்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |