முகம் வயதாகாமல் இளமையாகவே இருக்கணுமா? அப்போ இந்த பேக் டெய்லி போடுங்க!
பெண்களின் முகம் வயதாகாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி பேஷியல் மசாஜ் செய்ய வேண்டும்.
மேலும் வெயில் காலங்களில் ஏற்படும் அதிகமான வெப்பம் காரணமாக முகம் பாதிக்கப்படுகின்றது.
இதனால் வறண்ட சருமம், பொலிவிழந்த சருமம், ஆயில் ஃபேஸ், முக கருமை ஆகிய பிரச்சினை ஏற்படுக்கின்றன.
இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட தினமும் முகத்திற்கு இந்த தக்காளி பேக் போட வேண்டும். தக்காளி பேக் எப்படி செய்வது? என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – ஒரு ஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – மூன்று துளிகள்
தக்காளி பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்
காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
தக்காளி பேக் செய்வது எப்படி?
முதலில் ஒரு பவுலை எடுத்து அதில் கடலை மாவு,கோதுமை மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து மா கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
முகத்தை நன்றாக கழுவிய பின்னர் இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்யவும்.
சரியாக 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவைகள் சரி செய்ய வேண்டும்.