தக்காளி விலை தங்க விலையாக மாறும் போது கை கொடுக்கும் 5 மாற்றுப் பொருட்கள்! குறையே தெரியாது..!
இந்தியாவை பொருத்தமட்டில் தற்போது வரலாறு காணாத தக்காளி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டிலுள்ள பெண்கள் எப்படி தக்காளி இல்லாமல் சமைப்பது என புலம்பி வருகிறார்கள்.
தினமும் உணவின் சுவைக்காக பயன்படுத்தும் தக்காளி இப்போது ஒரு ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.
அந்த வகையில் சமைக்கும் போது தக்காளி இல்லாமல் அதற்கு மாற்றுப் பொருளாக எந்த எந்த பொருட்கள் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம்.
1. புளி
இந்திய பராம்பரியங்களில் புளிப்பு சுவைக்காக தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தலாம். புளி பேஸ்ட்டை சட்னிகள் மற்றும் ரசம் போன்ற சுவையான உணவுகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் அசைவ உணவுகளுக்கும் சேர்த்து கொள்ளலாம்.
2. பச்சை மாங்காய்
புளிப்பு சுவைக்காக மாங்காய் சீசனில் பச்சை மாங்காய் உணவில் சேர்க்கலாம். சாம்பார், ரசம், சப்ஜிகளில் மாங்காய் தூவல்கள் அல்லது துண்டுகளை பயன்படுத்தலாம். மாங்காயிலுள்ள சுவை உணவிற்கு மேலும் சுவையை அதிகரிக்கின்றது.
3.கோகம்
இந்திய கடல் ஓரங்களில் இந்த தாவரம் வளரும். இது தக்காளி விட நல்லதொரு புளிப்பு சுவையை கொடுக்கும். கோவான், கொங்கனி மற்றும் மகாராஷ்டிர உணவு வகைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
அப்போது எடுக்கப்பட்ட கோகம் கிடைக்காத பொழுது, காய்ந்த கோகங்களை ஊற வைத்து பயன்படுத்தலாம்.
4. உலர்ந்த மாங்காய் தூள் (அம்சூர்)
இது பச்சை பழுக்காத மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுக்கின்ற பொடியாகும். இந்திய உணவுகளில் இந்த பொடி அதிகமாக பயன்படுத்துவார்கள். அதிலும் உருளைக்கிழங்கு கறி மற்றும் சாட்களில் தக்காளிக்கு பதிலாக இதனை பயன்படுத்துவார்கள்.
5. கோங்குரா
தக்காளியை விட கோங்குரா பேஸ்ட் அல்லது பொடி தமிழகம் மற்றும் ஆந்திர உணவுகளுக்கு தரமான புளிப்பு சுவையை கொடுக்கின்றது. தக்காளி தட்டுபாடான காலப்பகுதியில் பருப்பு, சிக்கன் மற்றும் மட்டன் கறிகளை உயிர்ப்பிக்க கோங்குராவைப் பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |