கொரியன் பெண்களை போல் கிளாஸ் ஸ்கின் வேண்டுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும்
புரதம் என்றதுமே முதலில் நினைவில் வருவது முட்டை தான். முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது.
முட்டையின் வெள்ளைக் கருவை சரும ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிளாஸ் ஸ்கின்னை பெற...
முட்டையின் வெள்ளைக்கருவை சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை சீர்குலைக்கும். இவ்வாறு தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தலாம்.
முட்டையின் வெள்ளைக் கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக தடவி, 20 நிமிடங்கள் நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். வாரத்தில் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் காணப்படும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் கொரியன் பெண்களை போல் பளபளப்பாக மாறிவிடும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் முகப்பருக்களால் ஏற்படும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் என்பன மறைந்து முகம் மிகவும் பொலிவாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |