காதலுக்காக சூர்யா இதை செய்தார்.. உண்மையை கூறிய சிவக்குமார்- இனியாவது வதந்திகள் முடியுமா?
ஜோதிகாவிற்காக தன்னுடைய தந்தையையே சூர்யா மிரட்டினார் என அவருடைய சிவக்குமார் பகிர்ந்து கொண்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா இவர்களும் அடங்குவார்கள்.
சுமாராக 4 வருடங்கள் காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணமாகி பல வருடங்கள் கடந்தாலும் சூர்யா - ஜோதிகாவின் காதல் விவாகரம் இன்றும் பேட்டிகளில் பேசப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் சூர்யா - ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பின்னர் 4 வருடங்களுக்கு பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.
தந்தையையே மிரட்டிய சூர்யா
இந்த நிலையில் தன்னுடைய மூத்த மகனான சூர்யா எப்படி திருமணத்தை நடத்தினார் என்பது குறித்து சிவக்குமார் ஓபனாக பேசியிருந்தார்.
அதில், “ஆரம்ப காலத்தில் சூர்யா- ஜோதிகா இருவரும் காதலிக்கும் பொழுது அவருடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை இந்த விடயம் உண்மை தான். ஆனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்தால் ஒன்றாக வாழ்வோம். இல்லாவிட்டால் தனித்தனியாக வாழ்வோம் என பிடிவாதமாக இருந்தார்கள். இப்படி கூறி விட்டு சுமாராக 4 வருடங்கள் காத்திருந்தார்கள்...” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |