ரோபோ சங்கர் கடைசியாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிரபலம் பகிர்ந்த தகவல்
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் கடைசியாக வாங்கிய சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தன் காரணமாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் ஐசியூவிற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும், அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி சம்பளம்
இந்த நிலையில், ரோபோ சங்கர் இறப்பு பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றது.
ரோபோ சங்கரின் சம்பள விவரங்களை பகிர்ந்த மேனேஜர், “ உடம்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு தன்னை விளம்பரப்படுத்திய ரோபோ சங்கர் கோடம்பாக்கத்தில் ஒரு கோயிலில் நிகழ்ச்சி செய்து வந்தார்.
அப்போது பிரியங்கா அவரை அழைத்து 50 பேர்களில் ஒருவராக வாய்ப்பு கொடுத்தார். அதற்கு ஒரு 100 ரூபாயை சம்பளமாக கொடுத்தேன்.. அதன்பிறகு என்னுடைய நிகழ்ச்சி எல்லாம் ரோபோ சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அவர் கடைசியாக 1 லட்சம் வரை சம்பளம் வாங்கினார்..” என்றும் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |