குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசித்த சிவகார்த்திகேயன்- வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி தன்னுடைய கடின உழைப்பால் வெள்ளத்திரையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இவரது பல படங்கள் ஹிட்டடிக்க கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பில் ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் மாவீருடு என்ற பெயரில் வெளியாகிறது.
நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று படக்குழு முதல் பாடலை வெளியிட்டது, இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அங்கு மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். இவருக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கின்றனர்.
மகள் பாடகியாக அவதாரம் எடுக்க, தன்னுடைய அப்பாவே தனக்கு மகனாக பிறந்துவிட்டதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.