குடும்பத்துடன் கோலாகலமாக பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்... குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.
பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதற்கு முன்னாள் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.
இறுதியாக சிவகார்தி்கேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டிய புகைப்படத்தை தனது Xதள பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 14, 2025
பொங்கலோ பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 😊🙏#HappyPongal #HappySankranti ❤️🤗 pic.twitter.com/B5VsSNsPoZ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |