ரசிகர்களை சந்திக்க சென்ற சிவகார்த்திகேயன்: வைரலாகும் வீடியோ காட்சி
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்திக்க சென்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராவார். இவர் பல சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்து மக்களிடம் இருந்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களை சந்திக்கும் கூட்டம் ஒன்று சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் கலந்து கெண்டு தன் சினிமா வாழ்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இப்படி சினிமாவில் எனக்கு நடக்கும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள தந்தையோ தாயோ இல்லை எல்லாமாக நீங்கள் தான் உள்ளீர்கள், அதனால் தான் இந்த கூட்டம் அரங்கேற்றப்பட்டது என கூறினார்.
இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
— SKFC Videos (@SKFC_Videos) March 12, 2024