சிவகுமார்- சூர்யாவை பிரித்த ஜோதிகா! புயலை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்
நடிகர் சிவகுமாரையும் மகனான சூர்யாவையும் பிரித்தது ஜோதிகா தான் என பயில்வான் பேசிய வீடியோ யூடியூப் சேனலில் வைரலாகி வருகின்றது.
சிவகுமார் ஒரு நடிகராவார், இவர் பல சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருடைய ஊருக்கு அருகில், தனது சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் மகன் சூர்யா இவரும் ஒரு நடிகராவார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் தற்போது மும்பையில் செட்டிலாகி இருக்கின்றனர்.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், 'நடிகர் சிவகுமார் சமீபத்தில் போட்டோ எடுக்க வந்த ரசிகரின் போனை தூக்கி வீசினார். அதே போல சால்வை போடவந்தவரிடம் கோபப்பட்டார்.
இது இணையத்தில் மிகவும் பெரிதாக சர்ச்சையாக பேசப்பட்டது, இதிலிருந்து மீண்டு வந்தார் சிவகுமார்.
படங்களில் நடிக்க மாமனாரிடம் அனுமதி கேட்டுள்ளார் ஜோதிகா, இதுதவிர சிறு சிறு பிரச்சனைகளால் ஜோதிகா சூர்யாவை பிரித்து மும்பை கூட்டிச் சென்றுள்ளார்.
கேட்டால் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் என்கிறார்கள், சூர்யாவும் சென்னை வந்தால் அப்பா வீட்டில் தங்குவதாக கூறுகிறார், எது எப்படியோ அழகான கூட்டுக்குடும்பமாக இருந்தது உடைந்துவிட்டது என பேசியுள்ளார்.