முதலிடம் பிடித்த விஜய்: எந்த பட்டியலில் தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது எக்ஸ் தளம்.
இதில் நடிகர் விஜய்யின் லியோ படம் முதலிடம் பிடித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ஒரு படம் தொடங்கினாலே அப்படம் வெளியாகும் வரை அப்டேட்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதுவும் சூப்பர் ஹீரோக்கள் படம் என்றால் சொல்லவா வேண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.
படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள், யார் என்ன கதாபாத்திரம், கதை என்ன, பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஓடியோ வெளியீடு என ஒவ்வொன்றையும் பற்றி அப்டேட்கள் வெளியிடப்படுகிறது.
அப்படி இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு வெளியான பட்டியலில் நடிகர் விஜய்யின் லியோ படம் முதலிடத்தில் உள்ளது.
#Leo is the most talked about Indian film of 2023 #YearOn? pic.twitter.com/9hxnNdT0RI
— Seven Screen Studio (@7screenstudio) March 13, 2024
லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி பட்டையை கிளப்பியது.
இவர்கள் மீண்டும் இணைந்து உருவான படம் தான் லியோ, இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதிகம் பேசப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ‘சலார்’, மூன்றாவது இடத்தில் ‘வாரிசு’, நான்காவது இடத்தில் ‘துணிவு’ இடம்பெற்றுள்ளது.
இத்தகவலை லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தன்னுடைய பக்கத்தில் வெளியிட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.