சிங்க குட்டியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 வயதாகும் ஆண்சிங்க குட்டி ஒன்றை தத்தெடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் தன் சொத்த முயற்சியால் முன்னேறி வருபவர் தான் சிவகார்த்திகேயன்.
இவரும் ஒரு காலத்தில் விஜய் ரிவியின் வாரிசாகத் தான் இருந்தார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன்மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
முதன் முதலில் காமெடி நடிகராக படங்களில் நடிக்கத் தொடங்கிய கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து என பல வித்தியாசமான படங்களை நடித்து டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். தற்போது இவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது.
சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
சினிமாவில் மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பல விடயங்களில் உதவி செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 3 வயதான ஷேரு என்ற குட்டி ஆண் சிங்கம் ஒன்றை தத்தெடுத்திருக்கிறார். இந்த குட்டி சிங்கத்தை ஆறு மாதத்திற்கு தான் தத்தெடுத்து இருக்கிறார்.
இவ்வாறு உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அந்த விலங்குகளுக்கான பராமரிப்பு செலவுகளை அழிக்க வேண்டும்.
அந்தவகையில் சிவகார்த்திகேயன் இதற்கு முன்னதாக யானை, புலி போன்ற விலங்குகளையும் தத்துதெடுத்து பராமரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |