கோரத் தாண்டவமாடும் கொரோனா..... உத்தரபிரதேச உயிரியல் பூங்காவில் சிங்கத்துக்கு கொரோனா
உத்தரபிரதேச மாநிலம், ஜாய்பூரில் வன உயிரியல் பூங்கா உள்ளது.
இங்கு பராமரிக்கப்பட்டு வந்த திரிபூர் என்ற பெயருடைய சிங்கத்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஜாய்பூரில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த திரிபூர் என்ற பெயருடைய சிங்கத்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து ஒரு சிறுத்தை, ஒரு வெள்ளைப்புலி, ஒரு பெண்சிங்கம் ஆகியவற்றின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
விலங்குகளுக்கு கொரோனா தொற்று எந்த வகையில் பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இருந்தாலும் உணவு எடுத்துச் செல்பவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மூலம் அவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. முதன்முதலில், ஐதராபாத் உயிரியல் பூங்காவில், 8 சிங்கங்களுக்கு மே 4-ந்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.