எனக்கும் அஸ்வினுக்குமிடையே கெமிஸ்ட் ஒர்க் அவுட்டாகியுள்ளது! என்னுடைய அடுத்த ஆசை இது தான்! சிவாங்கி ஒபன் டாக்
சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிர பலமானவர். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். இந்நிலையில் சிவாங்கிக்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்வரிசை நடிகர்களின் பெயரை பட்டியலிட்டு, இவர்கள் படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குக் வித் கோமாளியில் எனக்கும் அஸ்வினுக்குமிடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகியுள்ளது.
அதனால் அஸ்வின் சினிமாவில் நடித்தால் அந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறார்.