சம்மணம் இட்டு அமர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? இத்தனை நோய்கள் வராமல் உங்களைக் காக்கும்!
நம் முன்னோர்கள் நமக்கு நிறைய விடயங்களை விட்டுச் சென்றாலும் நாம் எதையும் முழுதாக பயன்படுத்துவதில்லை.
அவர்கள் தங்களைப் போலவே தங்கள் சந்ததிகளும் நிறைய விடயங்ளை தெரிந்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தலைமுறை தலைமுறையாக பல விடயங்களை விட்டுச் சென்றார்கள்.
ஆனால் காலம் மாற மாற நாம் பல விடயங்களை மறந்து நமது தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் புதிய புதிய தொழிநுட்ப விடயங்களைக் புகட்டி வருகின்றோம்.
இதனால் பாதிக்கப்படுவது நமது தலைமுறையே இவ்வாறு அவர்கள் சொல்லி கொடுத்த பழக்கம் ஒன்றுதான் வாழை இலை விரித்து சம்மணம் கால் போட்டு கீழே அமர்ந்து சாப்பிடுவது.
இவற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றதென்று உங்களுக்குத் தெரியுமா?
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் தரையில் சம்மணம் இட்டு தான் சாப்பிட்டு வந்தார்கள். தற்போது போல மேசையில் அமர்ந்து பழகியது இல்லை.
நன்மைகள்
- காலை மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடும் போது ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக இருக்கும்
- சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணம் ஆகும்
- சம்மணமிட்டு உணவருந்துவதால் ‘பசி அடங்கிவிட்டது’ என்ற உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்
- கலோரிகள் குறைந்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்
- உடல் உறுதிபெறுவதோடு, மூட்டு சார்ந்த நோய்கள் ஏற்படாது
- இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமை கிடைப்பதுடன் இடுப்பு இணைப்புகளில் நெகிழ்வுத் தன்மை ஏற்படும்
- களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் உடல் இயங்க, சம்மணம் வழிவகுக்கும்
- பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்
- மனதை அமைதிப்படுத்தவும் ஒருநிலைப்படுத்தவும் உதவும்