Siragadikka Aasai: பொய்கூறி மீண்டும் விஜயாவிடம் மாட்டிக்கொண்ட ரோகினி... மீனாவால் உடையுமா உண்மை?
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டைவிட்டு வெளிய நிலையில், தற்போது ரோகினி மீனாவை கடை ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் உண்மை மீனாவிற்கு தெரியவந்துள்ள நிலையில், வீட்டு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்த மீனா முத்துவிடம் வேண்டுமென்றே சண்டை போட்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ரோகினி தன்னை குறித்த உண்மை வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றார். இந்நிலையில் மீனா உண்மையை அவரது அம்மாவிடம் கூறிவிட்டாரா என்ற சந்தேகம் ரோகினிக்கு எழுந்துள்ளது.

இதனால் மீனாவை கடை ஒன்றிற்கு வரவழைத்து பேசியுள்ளார். இருவரும் ஒன்றாக செல்லும் போது விஜயா இவர்களைப் பார்த்துள்ளார்.
வீட்டிற்கு வந்த ரோகினியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார். ஆனால் ரோகினி மீனாவை சந்தித்த விடயத்தை மட்டும் மறைத்துவிடுகின்றார்.
விஜயா மீண்டும் என்னிடம் பொய்கூற ஆரம்பித்துவிட்டாயா? என்று ரோகினியை சரமாரியாக சத்தம் போடுகின்றார். .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |