Siragadikka Aasai: நடுவர்கள் போட்ட குறும்படம்! அவமானத்தில் தலைகுனிந்த ரோகினி, மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் அதிகமாக ஆட்டம் போட்ட மனோஜ் மற்றும் ரோகினி இருவரையும் குறும்படம் போட்டு நடுவர்கள் வாயடைக்க வைத்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. இதில் வீட்டில் உள்ள மூன்று ஜோடிகளும் சிறந்த ஜோடிக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் மீனா முத்து சில தர்மசங்கடங்களை சந்தித்திருந்தாலும், தற்போது தூள் கிளப்பி வருகின்றனர். நடத்தப்பட்ட அத்தனை போட்டியிலும் முத்து மீனா சிறப்பாக கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கடைசி கட்டத்தில் நடுவர்கள் ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதற்கு என்ன வேண்டும்? என்ற கேள்வியை கேட்டுள்ளனர். மேலும் தனது ஜோடியிடமும் கலந்து பேசி பதிலை கூற கோருகின்றனர்.
இதில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் குறும்படம் போட்டு அசிங்கப்படும் அளவிற்கு தங்களது பதிலை கொடுத்துள்ளனர். கடைசியாக இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார் என்றால்? என்ற கேள்வியுடன் நடுவர்கள் நிற்பது போன்று இந்த ப்ரொமோ முடிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        