விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த ஜோதிகா... வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை ஜோதிகா விருது நிகழ்வு ஒன்றிற்கு மாடர்ன் உடை அணிந்து வந்தது பேச்சுப் பொருளாக இருந்து வருவதுடன், புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
நடிகை ஜோதிகா
நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு நடிப்பதை நிறுத்திய இவர், நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்து பெண்கள் மனதில் முக்கிய இடத்தை பிடித்தார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர், பாலிவுட்டிலும் நடித்து வருகின்றார். இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடனுன், மும்பையில் வசித்து வருகின்றார்.
விருது விழாவில் ஜோதிகா
சமீபத்தில் பிலிம்பேர் விழாவில் பங்கேற்ற ஜோதிகாவின் உடை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமிக்க சிவகுமாரின் குடும்பத்திலிருந்து ஜோதிகா, இப்படியொரு மாடர்ன் உடை அணிந்துவந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வலைப்பேச்சு பிரபலமான அந்தணன், நடிகை ஜோதிகா நாகரீகமாகவே உடை அணிந்து வந்துள்ளார் என்றும், அவரது உடையை ஊடுருவி பார்த்துவிட்டு சிலர் விமர்சனம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபலங்கள் மிகவும் மோசமாக முகம்சுழிக்கும் அளவிற்கு ஆடையணிந்து வரும் நிலையில், ஜோதிகா தற்போது அணிந்து வந்திருக்கும் ஆடை 99 சதவீதம் சிறப்பாகவே இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |