Siragadikka Aasai: இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் அம்மா... விஜயாவை எதிர்த்த மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் நல்லது செய்த விஜயாவையே மனோஜ் எதிர்த்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
பாமர குடும்பத்திலிருந்து திருமணம் செய்த பெண்ணிற்கு ஏற்படும் மாமியார் கொடுமை, மாமியாரிடம் என்னதான் கொடுமைகளை அனுபவித்தாலும் தனது பொறுப்பினை விட்டு விலகாத மருமகள், மூத்த மகனுக்கு சப்போட் செய்யும் தாய் இளைய மகனை ஒதுக்கி வைக்கும் நிலை என கதைகளம் சென்றுள்ளது.

சமீபத்தில் தனது மூத்த மகனுக்காக விஜயா மீனாவின் நகையை கொடுத்து பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். இதனால் அண்ணாமலை விஜயாவிடம் பேசாமல் ஒதுக்கி வைத்திருந்தார்.
இந்த பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு முத்து தனது பாட்டியை ஊரிலிருந்து வரவழைத்து பஞ்சாயத்தை ஒருவழியாக தீர்த்துள்ளார்.

மனோஜையும் கூப்பிட்டு பாட்டி பளார் என கன்னத்தில் அறைந்து சரியான பாடம் புகட்டியுள்ளார்.
ஆனால் இதில் எதிர்பாராத டுவிஸ்ட் ஒன்றினையும் முத்து கடைசியில் வைத்துள்ளார். அதாவது 29 லட்சம் கொடுக்க வேண்டிய பணத்தினை மாதம் 50 ஆயிரமாக கொடுப்பதற்கு ஐடியா கொடுத்துள்ளார்.

இதற்கு சுருதியும் சப்போர்ட் செய்ததுடன், பாட்டி அண்ணாமலை இருவரும் இந்த யோசனைக்கு சரி என்று கூறியுள்ளனர்.
ஆனால் மனோஜ் தன்னால் கொடுக்க முடியாது என்று பல காரணங்களை கூறியதால், பாட்டி விஜயாவை விட்டு மனோஜிடம் கூற சொல்லியுள்ளார். ஒரு வழியாக 50 ஆயிரம் மாதா மாதம் கொடுப்பதற்கு பேசி முடிக்கப்பட்டது.

நாளைய நிகழ்வில் விஜயா மகன் கொடுக்க வேண்டிய பணத்திற்காக ரோகினியிடம் நெருக்கடி கொடுத்துள்ளார். உங்க அப்பாவிடம் இருந்து வாங்கி கொடு என்று கோபமாக கூறியுள்ளார்.
பின்பு மனோஜிடம் சென்று உன்னால் நாங்க அசிங்கப்பட்டு நிற்கிறோம் என்று திட்டிய போது, மனோஜ் எல்லாவற்றிற்கும் நீங்க தான் காரணம்... என்று விஜயாவை திட்டியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜயா அதிர்ச்சியில் காணப்படுகின்றார். மிகவும் சுவாரசியமான கதைகளத்துடன் செல்லும் இந்த சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
You May Like This Video
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |