Siragadikka Aasai: கோபத்தில் க்ரிஷை அடித்த ரோகினி! பஞ்சாயத்தை கூட்டிய மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷின் பாட்டி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் நிலையில், தற்போது விடுமுறை விண்ணப்பத்தை எழுதிகொடுத்து ரோகினி வசமாக குடும்பத்தினரிடம் சிக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை திட்டித்தீர்த்து வருகின்றார்.
தற்போது க்ரிஷ் முத்துவுடன் விஜயா வீட்டிற்கு வந்துள்ளார். ரோகினியின் அம்மா விபத்தில் சிக்கிய நிலையில், இங்கு அழைத்து வந்துள்ளார்.
பள்ளிக்கு விடுமுறை எடுப்பதற்காக ரோகினி விடுமுறை கடிதம் எழுதியுள்ளார். அப்பொழுது ரோகினி க்ரிஷின் தாய் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு எழுதியுள்ளதை மனோஜ் பார்த்துள்ளார்.
இதனால் கடிதத்தை வாங்கி கேள்வி எழுப்பியுள்ளார். ரோகினி மனோஜிடம் என்ன கூறி தப்பிப்பது என்று தெரியாமல் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |