Siragadikka Aasai: சீதாவிடம் இரட்டை வேடம் போடும் அருண்... முத்துவிற்கு எதிராக மாறுவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் சீதாவிடம் இரட்டை வேடம் போட்டுவரும் நிலையில், முத்துவிற்கு எதிராக சீதாவை மாற்றவும் முயற்சிக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பெரும்பாலான மக்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு செல்வதுடன், முத்து, மீனா இருவரும் குடும்பத்திற்கு செய்யும் தியாகத்தையும் பார்க்க முடிகின்றது.
தற்போது முத்துவின் நண்பர்களை அருண் அவமானப்படுத்திய நிலையில், இந்த விடயம் முத்துவிற்கு தெரியவந்துள்ளது.
மற்றொரு புறம் வீட்டிற்கு வந்த அருண் சீதாவிடம் முத்துவின் நண்பர்களை குறித்து தவறாக கூறி தனக்கு ஆதரவாக பேச வைத்துள்ளார்.
இந்நிலையில் முத்துவும் சீதாவை வேலை செய்யும் இடத்தில் வந்து சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார், ஆனால் சீதா கணவர் அருணுக்கு ஆதரவாக பேசுவது போன்று இருக்கின்றது. ஆனால் முத்து இனியும் பொறுமையாக இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |