Siragadikka Aasai: முத்துவின் சர்ப்ரைஸ் பரிசால் கண்ணீரில் பாட்டி... அசிங்கப்படுத்தப்பட்ட மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் பாட்டியின் பிறந்தநாளுக்கு முத்து கொண்டு வந்த பரிசு பாட்டியை கண்கலங்க வைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் அதிகமாக கவர்ந்து வருகின்றது. நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் சீரியல் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
மாமியார் கொடுமையை அனுபவிக்கும் மருமகள், தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகன் என்று மிகவும் சுவாரசியமாக இந்த சீரியல் செல்கின்றது.
மூத்த மகனுக்கு அதிகமாக சப்போட் செய்யும் விஜயா, மீனாவின் நகையை தூக்கி கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக மீனாவிடம் கவரிங் நகையை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த விடயம் முத்துவிற்கு தெரியவந்த நிலையில், மீண்டும் வீட்டில் ஒரு பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முத்து பாட்டிக்கு கொடுத்த பரிசு
முத்து எந்தவொரு பரிசையும் பாட்டிக்கு கொண்டு வரமாட்டார் என்று நினைத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆம் பாட்டியின் தோழிகளை 30 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்க முத்து ஏற்பாடு செய்ததுடன், அவர்களை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்.
இதனால் பாட்டி கண்ணீரில் மூழ்கியுள்ளார். மேலும் வந்தவர்கள் மனோஜை நன்றாகவே அசிங்கப்படுத்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |